குலோத்துங்க சோழன் கோவை - நூல் - மூன்றாவது - வன்புறை
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
பிரியே னென்றல்
பிரிந்து வருகென்றல்.
இடமணித் தென்றல்.
(இ-ள்) தலைவனூர் தூரத்திலுள்ளதோ? சமீபத்திலுள்ளதோ? என்று தலைவி வருந்திய அதனைக் குறிப்பாற் கண்ட தலைவன் ஊரிருக்குமிட மிகச் சமீபத்திலுள்ளதென்று கூறுதல்.
கட்டளைக் கலித்துறை
தேனே யுனது விழிகாது சூழ்ந்தெனச் சென்றுனதூர்
மானேயென் னூர்வள்ளை மேனாவை நீட்டுமெம் மன்னவர்க்குந்
தானே தலைமைப் பெருமான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
பூநேரு நின்றிரூ மேனியென் வாடிப் புலம்புவதே! 28
இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.
3 - வன்புறை முற்றிற்று.