வீதிவாழ் மனிதன்

காண அருவருப்பாய் காக்கைக்கும் கூடுண்டு
காட்டு மரப்பொந்தில் காத்திரமாய்ப் - போட்டுக்
குடியிருக்கும் பூங்கிளிக்கும் கூடுண்டு வீட்டுப்
படியின்றி வீதிமாந்தர் பார்.
*
பார்வைக் கெழிலில்லாப் பாம்புக்கும் புற்றுண்டு
நீர்வா லுயிர்கு நிலத்தடி - சீர்வாழ்
மனிதனுக்கோ செப்பும் வகைநல் மனையின்
புனிதம் அமைவதில்லை போ
*
போக்கிட மின்றிப் புலம்பிடும் மாந்தர்தம்
தேக்கிய ஆசைக்குத் தேடலிலை - மூக்கும்
முழியுமுள் ளாளைக் முடிக்குமுன் வாழும்
வழிநோக்கார் மண்ணின் வடு
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Feb-24, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 84

மேலே