புத்தகங்கள்

புத்தகங்கள்
உயிரற்றதாய் தெரிந்தாலும்
கையில் எடுத்து
விரித்த பின் தெரிகிறது
உணர்வுகளால் உயிருடன்
இருப்பது

ஏதோ ஒன்றை பற்றிய
அறிவுடன் இருந்தாலும்
எதுவுமே
கர்வம் கொள்வதில்லை
தன்னை அலங்கரித்து
கொள்வதுமில்லை


பிறரிடம் சென்று
அறிவுரை சொல்வதுமில்லை

அணுகும் மனிதர்களுக்கு
கூட அனுபவத்தின்
அறிவின் உணர்வுகளை
ஊட்டும் மெளன
பெட்டகங்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Feb-24, 9:54 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : puthakankal
பார்வை : 78

மேலே