பிரித்து விடும்

பிரித்து விடும்.
25 / 02 /2024
பற்களின் ஆரோக்கியம்
பற்றி உண்மை சொல்லுறேன்
பக்கம் வந்து கேட்டுக்கோ.
முதலில் முளைக்கும்
பால் பற்கள் - பின்
விழுந்து முளைக்கும்
நிலை பற்கள்.
மேலே கீழே தாடையில்
மொத்தப் பற்கள் முப்பத்திரண்டு
எண்ணிக்கை சொல்வேன்
தெரிஞ்சிக்கோ.
வெட்டுப்பற்கள் எட்டு
கோரைப்பற்கள் நான்கு
முன்கடவாய் எட்டு
பின்கடவாய் பன்னிரண்டு
இருபது வயதுக்கு பின்வரும்
ஞான பற்கள் நான்கு.
பற்களை பரராமரித்தல்
அவசியமான ஆரோக்கியம்
காலையும் இரவிலும்
பல் துலக்கவேண்டும்
நீரால் நன்றாய் வாயை
கொப்பளித்து துப்ப வேண்டும்
பற்சுகாதாரம் பேணவில்லையெனில்
பல நோய்கள் படியெடுத்து வந்துவிடும்
துர்நாற்றம் வீசியே மற்றவரிடமிருந்து
பிரித்து விடும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Feb-24, 9:01 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : pirithu vidum
பார்வை : 135

மேலே