ஏதோ ஒன்று…

ஏதோ ஒன்று…!
நேற்று இரவிலிருந்து
ஏதோ ஒன்று
இழந்தது போல்
இருக்கிறது
எதுவென்று தெரியவில்லை

தேக்கி வைத்த
சிந்தனையில் ஒன்று
சிந்தியிருக்குமோ?

இல்லையே வேண்டாத
சிந்தனைகள் கூட
சட்டவட்டமாகத்தான்
இருக்கிறது

அப்படியானால் என்னதான்
இழந்தோம்?
காற்றில் அலைந்து
களைத்து
சரி
உடலை சாய்த்து
ஓய்வெடுக்கலாம்
என்று நினைக்கும்போதுதான்
அட..!
உடலைத்தான் இழந்திருக்கிறோம்

நேற்று இரவு
யாரோ வண்டியில்
வந்து மோதி
கட்டாயத்தில்
வெளியே வந்தோமல்லவா?

இழந்துவிட்டது என்னவென்று
சிந்தனைக்குள்
வந்து விட்டாலும்

இனி சிந்தனைக்குத்தான்
என்ன வேலை?
உடல் இல்லாமல் !
காற்றோடு கரைந்து
போவதை தவிர..

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Feb-24, 4:11 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 46

மேலே