உண்மைக்கு உரு கடவுள்
உண்மையே உனக்கொரு உருவம் உண்டா
என்னை உணர்ந்தவரைக் கேள் என்றது
உண்மை என்வழியில் வந்த துறவியைக்
கேட்டேன் 'ஐயா உண்மைக்கு உரு உண்டா?'
என்று....அதற்கு அத்துறவி சொன்னார்
'நித்தியம் அவ்வுருவைக் காண்கின்றேன் நான்
நான் பூஜிக்கும் அரங்கத்தில் பள்ளிகொண்டான்
பரமன் திருவுருவில்' என்றார்
உண்மையின் உருவே உலகளந்தோன் பரந்தாமன்
எஞ்சிந்தையில் குடிகொண்ட ஈசன் என்னரங்கன்...
ஹரி....ஹரி....என்று பாடிக்கொண்டே சென்றார்
அத்துறவி.
இது உண்மை...