செல்போன்

அடிமைத்தனமான
வாழ்க்கையை
வாழ்வதற்கு யாருமே
விரும்புவதில்லை

இந்த விஞ்ஞான உலகத்துல
"ஸ்மார்ட் போன்"
கையில் இருக்கும் வரை
உலகம் உன் கையில்தான்

"ஸ்மார்ட் போன்"
நம் கையில் இருக்கும்வரை
நாம் எல்லோரும் போனுக்கு
அடிமைகள்தான்

"சொல்லையும்"
"செல்போனையும் "
அளவாக உபயோகிக்க
கற்றுக் கொள்வது நலமே

இல்லையெனில்
உலகம் உன் கையில் இருக்கும்
சுற்றங்களைப் பிரிந்து
தனிமையில் நீ நிற்பது நிதர்சனம்!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Mar-24, 10:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : celphone
பார்வை : 200

மேலே