வெற்றிடம்
ஒரு துரோகம்
அதனை உணரவைக்கலாம்;
ஒரு மரணம்
அதனை உயிர்ப்பிக்கலாம்;
ஒரு பிரியாவிடை
அதனை பிரியமாக்கலாம்;
ஒரு இழப்பு
அதனை இயல்பாக்கலாம்;
எது எப்படியோ....
வெற்றிடம் வெற்றிடமாகவே இருப்பதில்லை.
வயிறுக்கான வேலையை
மூளைக்கும் கொடுத்தால்
வெற்றிடத்தின் விலாசம்
வேறிடமாக இருக்கும்!

