இனிமை நிறைந்த உலகம்

இனிமை நிறைந்த உலகம்
+++++++++++++++++++++++++
சோளம் கம்புயென
நலம் பயக்கும்/
வளம் நிறைந்த
நிலம் கொண்டே/

ஆலம் மரமுடன்
அடர் காடும்/
பலமிகு மாக்கள்
பாக்களுக்கு உறைவிடமே/

காசுயின்றி சுவாசிக்கக்
காற்றை சுத்திகரித்தே/
மாசுயின்றித் தந்திடுமே
மனிதர் உயிர்வாழ/

வயலெல்லாம் பொன்விளைய
வருமானம் ஈட்டிடலாம்/
அயலகம் சென்றே
அள்ளிவர ஏதுமில்லை/

பம்பரமாகச் சுழன்றே
பலநாடு சென்றாலும்/
நம்நாடே இனிமை
நிறைந்த உலகே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (5-Apr-24, 5:49 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 37

மேலே