குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின கவிதை

*இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி இதை படியுங்கள்.....*





😪😪😪😪😪😪😪😪😪😪😪

*குழந்ததை தொழிலாளர்*
*எதிர்ப்பு தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

😢😢😢😢😢😢😢😢😢😢😢

குழந்தைகள்
தொழிலாளர் ஆவதை எதிர்ப்பது...
இன்றுவரை
"குழந்தை தொழிலாளர்
எதிர்ப்பு தினம்" மட்டும்தான்....
நாம்
எதிர்த்திருந்தால்
இந்த தினம்
இன்னும் இருந்திருக்குமா?

"பதினான்கு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்
கட்டாய கல்வி" என்ற
செய்தி தாங்கிய
நாளேடுகளை
கடை கடையாக
வீடு வீடாகப் போட்டுகின்ற
சிறுவர்கள் தான்
எத்தனை எத்தனை...?

மாலை வந்தவுடன்
கடற்கரை மண்ணில்
மண்டியிட்டு
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் தான்
எத்தனை எத்தனை....?

வயிற்றில் பசியோடு
ஓட்டல் மேஜையை
துடைத்துக் கொண்டிருக்கும்
சிறுவர்கள் தான்
எத்தனை எத்தனை...?

செங்கல் சூளையில்
தங்கள் வாழ்க்கை
மண்ணாகிக்
கொண்டிருப்பதை அறியாமல்
செங்கள் செய்யும்
சிறுவர் சிறுமியர்கள் தான்
எத்தனை எத்தனை...?

கல்லுடைத்து கல்லுடைத்து
மருத்துப்போன
பிஞ்சுக் கரங்கள் தான்
எத்தனை எத்தனை...?

புத்தகப் பையை
சுமக்க வேண்டிய முதுகில்
குப்பை மூட்டையை
தூக்கி தூக்கி
கூனிப்போன
குழந்தைகள் தான்
எத்தனை எத்தனை......?

அம்மா!
இடையில் தூக்கி
நடந்த நாட்களை விட .....
கட்டிட தொழிலில்
அதிக நாட்கள்
செங்கல்லை தலையில்
தூக்கி நடக்கும
சிறுவர் சிறுமியர்கள் தான்
எத்தனை எத்தனை....!!!

பட்டறைகளில்
பழைய
பொருட்களோடு ஒன்றாக
பணி செய்து கொண்டிருக்கும் சிறுவர்கள் தான்
எத்தனை எத்தனை....!

சொல்லிக்கொண்டே போனால் சொல்லி முடிப்பதற்குள்
காலமே காலமாகிவிடும்.....!

ஏனோ?
ஏழைகளுக்காக போடப்படும் சட்டங்கள் எல்லாம்
சட்ட புத்தகத்தோடு மட்டுமே
இருக்கிறது ....
ஏழையின்
வீட்டு வாசலுக்கு
வருவதே இல்லை.......!

பூமி வெப்பமடைவதற்கு ...
குழந்தை
தொழிலாளர்கள் விடும்
'ஏக்கப் பெருமூச்சும்'
ஒரு காரணம் என்பது
எத்தனை பேருக்கு தெரியும்..?

பிள்ளைகளை
பள்ளிக்கு
அனுப்பலாம் என்று
பெற்றோர்கள் நினைத்தாலும்
இந்த பாழாப்போன வறுமை
விடுவதில்லையே!
பற்றி எரியும் பசியை
தீர்க்க வேறு வழி இல்லையே...!

மூன்று வேளை உணவே
அவர்களுக்கு
உலகமானப் பிறகு ...
இந்த உலகத்திலிருந்து
அவர்கள்
எதை அனுபவிக்கப்
போகிறார்கள்?
எதை
அடையப் போகிறார்கள்?

வறுமைக்கோட்டினாலேயே!
என் தேசம்
உலக வரைபடத்தில்
வரையப்படுமானால்...
வரைபடத்திலிருந்து
அழிந்து போகட்டும்
என் தேசம்.....!
வறுமையில்லாத
ஒரு தேசம்
நாளை உருவாகட்டும்.....!

ஏழைகளுக்காக
அரசு போடும்
சட்டங்கள் எல்லாம் செய்தித்தாள்களையும் தொலைக்காட்சிகளையும்
நிரப்புவது போல்
ஏழைகளின்
மனதையும்
வயிற்றையும் என்று
நிரப்புமோ....?

குழந்தைகளுக்கு என்று
நிறைய
சட்டங்கள் இருக்கிறது
அதில் குறையேதும் இல்லை....
ஆனால்
சட்டப்படி தான்
எதுவும் நடப்பதில்லை....!

குழந்தை தொழிலாளர்கள்
இல்லாத இடம் ஏது....?
சட்டம் போடும் அரசே!
நீயதை கண்ணால்
பார்க்கவில்லையா?
பார்த்தும் பார்க்காமல்
போகும்போது
உன் மனசாட்சி
உறுத்தவில்லையா...?

சட்டம் போடுவதற்கு
நேரம் இருக்கின்றது...
ஆனால்
அதை
நடைமுறைப்
படுத்தப்படுகிறதா ? என்று
கவனிப்பதற்கு தான்
இங்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை.....!

குழந்தைகள்
தொழிலாளர் ஆவதற்கு
அதிக பேர்
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை....
குறைந்த பேர்
தெரிவித்தாலே போதும்...
ஆம் ....
தொழிலாளர்களை விட
முதலாளிகள் குறைவுதான்...!

ஒவ்வொரு முதலாளியும் 'குழந்தைகளை
தொழிலில்
அமர்த்த மாட்டோம்' என்று
உறுதிமொழி எடுத்தாலே போதும்
குழந்தை தொழிலாளர்கள்
இல்லாமல் போய்விடுவார்கள்....

அரசும்
வறுமைக்கோட்டிற்கு கீழ்
படிக்கும் பிள்ளைகளுக்கு
குறிப்பிட்ட தொகையை
மாதம் மாதம் வழங்குவதை
உறுதி செய்தால்....
குழந்தை தொழிலாளர்கள்
என்ற வார்த்தையே!
அகராதியில் இருந்து
அகற்றப்பட்டு விடும்....!

ஒவ்வோர் ஆண்டும்
குழந்தை தொழிலாளர்
எதிர்ப்பு தினம் அன்று
புலம்பி கொண்டு இருப்பதை
நிறுத்திவிட்டு .....
அவர்கள் வாழ்க்கையில்
புதிய விடியலை உண்டாக்க
வழி தேடுவோம்...!
புரட்சி ஒலி உரக்க ஒலிக்க
அனைவரும் ஒன்று கூடுவோம்.....!

*கவிதை ரசிகன்*

😪😪😪😪😪😪😪😪😪😪😪

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (12-Jun-24, 7:01 pm)
பார்வை : 29

மேலே