இது தமிழ் மண் இல்லை

ஆரம்பப்பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு

மாணவர் சேர்க்கை. வரிசையின்

இறுதியில் நின்றிருந்த பெற்றோர்

தலைமை ஆசிரியர் அறையில்

நுழைகிறார்கள்.

@@@@@

வணக்கம் ஐயா.

@@@@@

வணக்கம் ஐயா. வணக்கம் அம்மா.

இருவரும் உட்காருங்க. எங்கள் பள்ளியில்

ஒவ்வொரு வகுப்பிலும் ஐந்து பிரிவுகள்.

முதல் வகுப்பில் 200 பேர். ஏற்கனவே 199

பேர் சேர்ந்து விட்டார்கள். 200வது

மாணவனாக உங்கள் பையன். பிறப்புச்

சான்றிதழைக் கொடுங்கள். பையன் பேரு

'மண்'. ஒன்றாம் வகுப்பில் ஏற்கனவே

சேர்ந்துவிட்ட அனைத்துக் குழந்தைகள்

பெயரும் இந்திப் பெயர்கள்.‌ அதாவது 199

பெயர்களும் இந்திப் பெயர்கள். உங்கள்

பையன் பேரு மட்டும் தான் 'மண்' என்ற

அழகான தமிழ்ப் பெயர். வாழ்த்துக்கள்.

@@@@@@

(பெற்றோர் இருவரும் குறுக்கிட்டு

பதற்றட்டத்துடன்): ஐயா இது (இந்தப்

பெயர்) இந்தி மண்; தமிழ் மண் இல்லங்க

ஐயா.

@@@@@@

(தலைமை ஆசிரியர் அதிர்ச்சியுடன்)

????????

எழுதியவர் : மலர் (29-Jul-24, 9:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 74

மேலே