கோமாளி தினம் கவிதை

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

*கோமாளி தினம் இன்று*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮



#கோமாளி_தினம்

பொன் பொருளை
தானம் செய்வார்கள்
இவர்கள் தான்
தங்களுடைய
சிரிப்புகளை
தானம் செய்கின்றனர்...

முள்ளை
முள்ளால் எடுப்பது போல்
இவர்கள்
சிரிப்பை
சிரிப்பால் வர வைக்கின்றனர்...

அழுவைப்பதற்கு
ஆயிரம் பேர் இருக்கலாம்
சிரிக்க வைக்க
இவர்கள் மட்டும்தான்
இருக்கின்றார்கள்.....

"துன்பம் வரும் வேளையிலே
சிரிங்கள் " என்று சொன்ன
வள்ளுவரே
சிரித்தாரோ என்னவோ?
ஆனால்
சிரித்தவர்கள் இவர்களே....

இவர்களின்
முகமூடிக்கு பின்
கண்ணீர் தேங்கி நிற்கலாம்...

இவர்களுடைய
ஒப்பனைக்கு பின்னால்
வறுமை
நாற்காலி போட்டு
உட்கார்ந்து இருக்கலாம்...

இவர்களின்
சிரிப்புக்கு பின்னால்
கஷ்டங்கள்
கழுத்தில் கத்தி
வைத்திருக்கலாம்....

இவர்களின்
நடிப்புக்கு பின்னால்
துன்பங்கள் பொட்டில்
துப்பாக்கி வைத்திருக்கலாம்
யார் அறிவார்?

இருப்பினும்
இவர்கள்
சிரிக்க வேண்டிய
கட்டாயத்திலேயே
இருக்கிறனர்......

ஆடை அணியாத
கோமாளிகளும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
ஆங்காங்கே....

பலர்
மற்றவர்களை
கோமாளி ஆக்குகின்றனர்
சிலர்
தங்களைத் தாங்களே
கோமாளிகளாக
ஆக்கிக் கொள்கின்றனர்....

பலர்
அவ்வப்போது
கோமாளிகளாக நடிக்கின்றனர்....
சிலர்
கடைசிவரை
கோமாளியாகவே
வாழ்ந்து விடுகின்றனர்...


*கவிதை ரசிகன்*


🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Aug-24, 7:57 pm)
பார்வை : 21

சிறந்த கவிதைகள்

மேலே