அல்கா கல்கா

அல்கா கல்கா

நம்ம ஊர்ல இருக்கிற யாராவது இந்தப் பேருங்களைக்

கேள்விப்பட்டிருகிறீங்களா?

@@@@@@@@@@@@@

பேருங்களைச் சொல்லுங்க மாமா.

@@@@@@@@

சொன்னாலும் யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. நீங்க எல்லாம் உங்க

பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களை வச்சு அழகு பார்க்கறீங்க. ஆனா நான்

என் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பேருங்களை வைக்கப்

போறேன்.

@@@@@@@@@@@@

சந்தோசமா வையுங்க மாமா. அந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்னாவது

சொல்லுவீங்களா?

@@@@@@@@@@@@

ஏண்டா மச்சான் ஊருல் இருக்கிறவங்க எல்லாம் அவுங்க பிள்ளைகளுக்கு

வச்சிருக்கிற இந்திப் பேருங்களுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரிஞ்சிட்டு

வச்சாங்களா அல்லது நம்ம ஊருக்காரங்களுக்கு அந்தப் பேருங்களுக்கான

அர்த்தங்களைச் சொல்லிட்டுப் பேரு வச்சாங்களா? என் குழந்தைகளுக்கு

வைக்கிற பேருங்களுக்கு எனக்கு அர்த்தம் தெரியும். ஆனால் யாருக்கும்

அந்த அருமையான இனிமையான பேருங்களுக்குரிய அர்த்தத்தை

மத்தவங்களைப் போல நானும் சொல்லமாட்டேன்.

@@@@@@@@@@@@

சரி நீங்க சொல்லவேண்டாம். அந்த அழகான இனிமையான

பேருங்களையாவது சொல்லுங்க மாமா.

@@@@@@@@@@@@@@@

அல்கா – கல்கா
@@@@@@@@@@@@@@@@

அடடா ரொம்பப் புதுமையான பேருங்க மாமா. இந்தப் பேருங்களைத்

தேர்ந்தெடுத்த நீங்க சிந்தாபாத்து.

@@@@@

அதென்னடா மச்சான் சிந்தாபாத்து.

@@@@@@

"நீங்க வாழ்க"னு சொன்னேன் மாமா,

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@@@@@@

Alka = Bright, Shining
Kalka = God is gracious

எழுதியவர் : மலர் (11-Aug-24, 6:19 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 44

மேலே