என்னடா தகராறு

வகுப்பறையில் ஆசிரியர:

கடைசி வரிசையில் இருக்கிற உங்க

இரண்டு பேருக்கும் என்னடா தகராறு?

@@@@@@@@

(பக்கத்து பையனைப் சுட்டிக் காட்டி ஒரு

மாணவன்): ஐயா, இடைவேளேயின் போது

விளையாட்டு மைதானத்துக்குப் போனேன்.

அங்க இவன் தன்னை பத்துச் சுற்றுச்

சுற்றும்படி என்னைக் கட்டாயப்படுத்தி

தகராறு செய்தான். நான் மறுத்தேன்.

அதற்கு வகுப்பு வந்தபிறகும் முனகிட்டே

என்னைத் திட்டறான்.

@@@@@@@

ஏன்டா விளையாட்டு மைதானத்தில்

அவனை பத்துத் தடவை உன்னைச் சுற்றி


வரச் சொன்ன?

#@@@@@

ஐயா என் பேரு கிரி. அவனை கிரிவலம்

சுற்றச் சொல்லித்தான் பத்துத் தடவை

என்னைச் சுற்றி வரச்சொன்னேன்.

@@@@@@

ஏன்டா நீ மலையா அவன் உன்னைச்


சுற்றிவர?

@@@@@

'கிரி'ன்னா 'மலை'ன்னு எங்க அப்பா தான்

சொன்னார். அதனால் அவனை கிரிவலம்

வரச் சொல்லிச் சொன்னேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Giri = Mountain

எழுதியவர் : மலர் (25-Aug-24, 6:01 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : ennadaa thagaraaru
பார்வை : 33

மேலே