மாடு மேய்க்கிறவள் எங்கே

நண்பா நட்ராஜ், மாடு மேய்க்கிறவள் எங்கே போயிட்டா?




@@@@@@@@@@


யாரைடா கேட்கிற தன்ராஜ்?


@@@@@@@@@@@@@


உங்க வீட்டில இருக்கிற மாடு மேய்க்கிறவளைத்தான் கேட்டேன்.



@@@@@@@@@@@@


நாங்க மாடு வளர்க்கல. மாடே இல்லாத வீட்டில மாடு

மேய்க்கிறவள் இருக்க வாய்ப்பு உள்ளதா? நாங்க வாங்கறது


ஆவின் பால். கறந்த பால் விக்கிற பையங்கிட்டயும் நாங்க பால்


வாங்கறதில்லை.

@@@@@@@@@@

நான் சத்தியமா உண்மையைத்தான் சொல்லறேன். உங்க விட்டு


மாடு மேய்க்கிறவள் இன்னும் வரலியா?


@@@@@@@@@@@@

என்னடா தன்ராஜ் குழப்பற?


@@@@@@@@@@@

பள்ளி நேரம் முடிஞ்சு ஒரு மணி நேரம் ஆகுதே! இன்னுமா மாடு


மேய்க்கிறவள் வீட்டுக்கு வரலியா?

@@@@@@@@@@@@@@@@@@

என்னடா உன்னோட வம்பாப் போச்சு.

@@@@@@@@@@@@@@

உன் பொண்ணைத்தாண்டா கேட்டேன்


@@@@@@@@@@@@@

ஏண்டா என் தகுதி என்னன்னு உனக்குத் தெரியாதா? மாதம்

இரண்டு இலடசம் சம்பளம் வாங்கறேன். என் பொண்ணு அபிரா

உஞ்து வண்டில பள்ளிக்குப் போயிட்டு வர்றா. அவளைப் போயி

மாடு மேய்க்கிறவள்னு சொல்லறயே நீ.


@@@@@@@@@@

உம் பொண்ணுப் பேருக்கு அர்த்தம் தெரியுமா?

@@@@@@@@


தமிழருக்கு அடையாளம் பெத்த பிள்ளைகளுக்கு இந்திப்

பேருங்களை வைக்கிறது தான். பிள்ளைகளுக்குத் தமிழ்ப்

பேருங்களை வச்சா எழுத்தறிவு இல்லாத தமிழர்கள்கூட நம்மை

மதிக்கமாட்டார்கள். மெத்தக் கற்ற மேதைகளைப் பற்றிச்

சொல்ல வேண்டியதில்லை. அதனாலதாண்டா தன்ராஜ் மரியாதை

மதிப்புக்காக என் பொண்ணுக்கு அர்த்தமே தெரியாமல்

'அபிரா'ங்கிற இந்திப் பேரை வச்சுட்டேன். ஆமாம் என்

பொண்ணோட பேருக்கு 'மாடு மேய்க்கிறவள்'னு தான் அர்த்தமா?

@@@@@@@@@@@@

ஆமாண்டா.

@@@@@@@@@@@


ஐயய்யோ தெரியாம இந்திப் பெயர் மோகத்தில என் பொண்ணுக்கு

அர்த்தம் தெரியாம 'அபிரா'னு பேரு வச்சுட்டனே. இந்தப் பேரோட

அர்த்தம் தெரிஞ்சா எங்களை ஒரு பிச்சைக்காரன்கூட

மதிக்கமாட்டானே! என் பொண்ணுகூடப் படிக்கிற பிள்ளைகளுக்கு

'அபிரா'ன்னா 'மாடு மேய்க்கிறவள்'னு அர்த்தம்னு தெரிஞ்சா

அவளை எல்லோரும் கேலி கிண்டல் பண்ணுவாங்களே! நான் என்ன

செய்வேன்.

@@@@@@@@@@@

ஒன்னும் கெட்டுப்போகலைடா நட்ராஜ். உன் மைத்துனர்

வழக்குரைஞர் தானே. அவர்கிட்டச் சொன்னாப் போதும் உன்

பொண்ணுக்கு ஒரு அழகான தமிழ்ப் பேரா வச்சு நாளிதழ்களிலும்

அரசிதழிலும் அந்தப் பேரை வெளியிட்டுவிடுவார். அந்த இதழ்

பிரதிகளைப் பள்ளியில் கொடுத்து உன் பொண்ணின் பெயர்

மாற்றத்தைப் பள்ளி பதிவேடுகளில் மாற்றச் சொல்லி எழுத்துப்

பூர்வமா ஒரு விண்ணப்பத்தைக் கொடு. அவர்கள் உன்

பொண்ணின் பெயர் மாற்றத்தை பள்ளிப் பதிவேடுகளில் தக்கபடி

மாற்றிவிடுவார்கள.


@@@@@@@@@

ரொம்ப நன்றிடா நண்பா. எங்க குடும்பத்தின் மானம்,

மரியாதையைத் தக்க சமயத்தில் காப்பாத்திட்டே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Abhira = Cowherd

எழுதியவர் : மலர் (23-Aug-24, 6:39 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே