சமாதானத்தின் முகவரி என்ன???

சொந்த மண், சொந்த வீடு, அதுவே சொர்க்கம்.
சந்தோஷ காற்று மட்டுமே சுகம் விசாரித்துச் செல்லும்,
அந்த நாட்கள் அடுத்த ஜென்மத்திலாவது வருமா!!!

சிரிப்பொலிகளை மட்டுமே ரசித்து பழகிய பூமிக்கு
வெடி ஒலிகள் மிக கொடூரம் தான்.......
பிஞ்சுகள் பஞ்சுகளாய் சுதந்திரமாக சுற்றிதிரிந்தன. இன்று
பிணங்களாய் படுத்துக்கிடகின்றன புன்னகைத்தவாறே......
புல்லேட்டும்(Bullet) பின்னோக்கி இருக்கும், குழந்தையின்
புன்னகையை ரசிக்க தெரிந்திருந்தால்.......
மழலை மொழிகளே மனையை அலங்கரிக்கும் அங்கு இன்று
செல்லுகளிட்ட சில்லுகளே சிரிக்கின்றன

காற்றிடமும் கதை பேசி சிரித்த ஒலிகள், இன்று
கண்ணீருடன் உறவாடுகின்றன.
பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த மனைவி என்ற கோணத்தொடு பலபேர்.......
சோகத்தை சொந்தமாக்கிக் கொண்ட சொந்தங்களாய்,
ஒரு கூரையின் கீழ் அகதிகள் என்ற உறவுடன்

'டாக்டராகணும்' ,'இன்ஜினியராகனும்' என்ற கனவோடு
கல்லூரிக்கு போன கலைமான்கள்
கசங்கிப் போன காகிதங்களாய் மூலையிலே...

பசிக்கு லீவு விட்டுப் பதறிப்போன
உள்ளத்தோடும் சிதறிப்போன வாழ்க்கையோடும்
சின்னாப்பின்னமாய் நாம்....

குயிலின் கானத்தை கேட்ட காதுகள் இன்று
மனித ஓலத்தை கேட்கின்றன.
இராணுவத்திடம் பிடிப்பட்டு,அடிப்பட்டு
ரத்தம் சிந்தும் உறவுகளாய் நாம்...
ரகலையிலும் மனரனங்களிலும் எம் வாழ்க்கையின் ஓரம் சிக்கித் தவிக்கிறது.

மனிதா!!! மரணித்த உள்ளமடா உனக்கு
இன்று நம் தேசம் ,
குண்டுகள் வரைந்திட்ட சித்திரம்.
இத்தனை செய்தும் சிரிக்கிறாய் பார் அதுவே விசித்திரம்.

சமூகமே! இன்று,
சாதனைகளை விட, வேதனைகளையே அதிகமாக
சம்பாதித்தோம்
வேதனைகளை சாதனையாக்கிட சமாதானத்துக்காய் ஒன்றாய் கைகோர்ப்போம். இனியும் ஒரு சமூகம் இரையாக்கப்படாமல் இருக்கட்டும் இந்த யுத்ததிற்க்கு,
புதைக்கப்பட்ட சமாதானத்தின் முகவரி என்ன???

எழுதியவர் : Zulfathul Shabnam (24-Oct-11, 5:28 pm)
பார்வை : 360

மேலே