அன்பின் கடைசி நிமிடம்..
வயது முதிர்ச்சியால்
நோயின்
தாக்கத்தில்
கண்மூடிய நிலையில்
தாய்...
அவளின் கடைசி
முடிவுக்காக
சூழ்ந்து நிற்கும் சொந்தங்கள் ...
அவள் கண் திறந்து பார்க்க
ஆவலுடன்
ஞாபகபடுத்தும் வாரிசுகள்...
யார் அழைத்தும் பார்க்காத
தாய்....
தன் அன்பை வென்ற
மகன் அழைத்ததும்
கண்திறந்தாள் முழுமையாக...
அவன் உருவத்தை
தன் விழிகளில் பதித்தாள்...
கண்மூடினாள்...
இறுதி ஊர்வலத்திற்கு
தயாரானாள்....
ஆனால்...
அன்பை உணர்ந்த
அன்புமகனோ
சாகும் வரை
நடை பிணமாய்....