முற்றுகை இடும் புற்று நோய் .....

ஆரோக்கியமான செல்களை
ஆனந்தமாய் அழித்து
ஆணி வேராய் படர்ந்து
"ஆண்கோ" என்ற வைரஸ் ஆல்
ஆக்கிரமிக்கப்பட்டு
அன்றாடம் புற்று நோயால் அவதி படுபவர்களின்
அறிவுரை........

புகையை புறக்கணியுங்கள்
பழங்களை உணவில் சேருங்கள்
எடையை பராமரியுங்கள்

வாழ்கைக்கு அர்த்தம் இல்லை......
அர்த்தத்தை வாழ்கைக்கு ஏற்படுத்துங்கள் ...

நாட்களை எண்ணாதிர்கள்.....
இருக்கும் நாட்கள் உங்களுடையது....

இன்றைய தினத்தை
இந்த மணித்துளிகளை
இந்த ஷணத்தை
இனிமையாக கழியுங்கள்.



எழுதியவர் : Kirupa Ganesh Nanganallur (8-Nov-11, 4:47 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 345

மேலே