யாருக்கு உண்டு இறைவன் அருள்?
நல்லோரின் நற்ப்பணிகள்
நன்றே தொடர
நல்லாசிகள் வழங்கியும்
தீய்யோரின் உடனிருந்து
திருத்தங்களுக்கான வாய்ப்புகளைக் கொடுத்து
திருத்துவதும்
எல்லாம்வல்ல இறைவனின்
முக்கியத் திருப்பணி.
ஆகையாலே,
நெடுங்காலம் - இறைவன்
தீய்யோரிடமும்,
குறிப்பிட்ட கடினகாலத்தில்மட்டும்
நல்லோரிடமும்
தோன்றித் தொண்டுகள் செய்கிறான்.
பிரித்துப்பார்க்கும் மனிதகுணம் - ஒருபோதும்
கிடையாது இறைவனுக்கு.
கிடைக்கும் அவனருள் - அவனை
நினைத்தும்,
நினைக்காதும்
பார்க்கும் பலருக்கு.