வாழ்க்கை ஒரு நாடகம்

வாழ்க்கை நாடகத்தில்
இரவு பகலாய்
மனிதன் நடிக்க

சூரியனும் சந்திரனும்
படம்பிடித்து
இறைவன் ஒருவனே
கண்டு மகிழ்கிறான்

அவரவர் நடிப்பிர்க்கேற்ற
பரிசுகளை வழங்குகிறார்

இங்கே பிறப்பும் இறப்பும்
உண்மையானவை

கதாபாத்திரத்தில் வரும்
அணைத்து சம்பவங்களும்
உண்மையே

கதை திரைக்கதை வசனம்
பாடல்கள் என
அனைத்தும் இறைவனால்
படைக்கப்பட்டவை

ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு கதா பாத்திரமே

இறைவன் ஒருவனால் மட்டுமே
காணமுடிந்த
வாழ்க்கை நாடகத்திற்கு
முடிவென்பதேயில்லை.................

எழுதியவர் : பிரபுமுருகன் (11-Nov-11, 10:27 am)
சேர்த்தது : Prabhu
பார்வை : 565

மேலே