ஒரு புத்தகம் விரிந்திருக்கும்
அஞ்சில் விளைவதும் இல்லை
வளைவதும் இல்லை
அன்னையும் தந்தையும்
ஆசானும் யாரும்
சொல்லித் தெரிவதில்லை
பிஞ்சில் பழுப்பது பேதமையே
பதினாறில் பெருகி வரும்
இளமை எனும் ஆறு
அந்த ஆற்றங்கரை மருங்கினில்
பூத்திருக்கும் புது மலர்
கண்கள் கவிந்திருக்கும்
கன்னத்தில் நாணம் கோலமிடும்
அந்திச் சிவப்பும் அங்கே தோற்றுவிடும்
நெஞ்சில் ஒரு புத்தகம் விரித்திருக்கும்
அந்தியின் அழகிய வரிகளை
அந்தக் கவிதையை
கவிஞர்கள்
காதல் என்பார்
-----கவின் சாரலன்