ஐயோ பாவம் மனிதன்?

இன்று வரை நாம்
காற்றை மட்டும் தான்
சுதந்திரமாக சுவாசிக்கிறோம்.,
இதை எழுதிமுடிக்குமுன்
இதற்கும் வரியோ -
அல்லது விலையோ
நிர்ணயிக்கப்பட்டாலும்
ஆச்சர்யமில்லை.,
ஏனெனில் - நமக்கு
வாய்த்த வாழ்க்கை -
வாய்த்த arasugal
வாய்ப்பளித்து நாம்
முன்னேற அல்ல -
வாய்க்கரிசி போட்டு
இடுகாட்டில் இட்டு
வைப்பதற்கே.,
கையில் வைத்த
வோட்டின் மை கூட
மறைய வில்லை.,
மனிதகள் பலர்
ஏறிய விலைவாசியில்
மாண்டு மறைந்து
போய் விட்டனர்.,
எவ்வளவு ஏற்றினாலும்
சுமக்க நாம் என்ன
கழுதைகளா?
அவற்றிக்கு கூட
விலங்கு பாதுகாப்பு
ஆர்வலர்கள் உள்ளனர் -
அனாதைகளாக விடப்பட்ட
மனித சமுதாயத்தை
காக்க எந்த விலங்கும்
முன் வருமா?
என்று தான் உணர்வார்களோ
நம்மை மனிதர்கள் என்று?

எழுதியவர் : சோனி ஜோசப் (22-Nov-11, 11:53 am)
பார்வை : 373

மேலே