நாகரீகத்தொட்டில்

அம்மா !
சுமந்த காலங்களில்
எனக்கு நீ
சமாதி கட்டியிருக்கலாம்
இல்லை
பிறந்த இடத்திலேயே
வெட்டிப் புதைத்து இருக்கலாம்
இப்படியும் ஒரு
பாதுகாப்பா எனக்கு
உன் பழைய சீலையில்
பத்திரமாய்
குப்பைத்தொட்டியில்
இது என்ன
நாகரீகத்தொட்டிலா
அம்மா !

எழுதியவர் : banumathi (24-Nov-11, 12:11 pm)
சேர்த்தது : G.BANUMATHI
பார்வை : 230

மேலே