"இவர்களுக்காக(திருநெல்வேலி சரணாலய குழந்தைகளுக்கு )kavipriyan
"இறைவனிடம் "
தினம்
தினம்
தொழுகிறேன்
கடவுளை
என்
கவலைக்கு
அல்ல
என்னால்
எனக்காக
யாரும்
கவலை
கொள்ள
கூடாது
என்று...!
by
kavipriyan
-----------------------------------------------------------------------
"குப்பைதொட்டி"
என்னிடத்தில்
வீணான
பொருட்களை
தருவதுண்டு.......
இப்படி
விலைமதிப்பற்ற
பொக்கிஷத்தை
தந்தால்
என்ன செய்வேன்
1098க்கு
அழைப்பு
விடுப்பேன்...........
by
kavipriyan
-------------------------------------------------------------------
"இன்பம்"
தகப்பன்
இன்பம்
உயிர்
கொடுத்து
உதறி
தள்ளியது.........
தாயின்
இன்பம்
வளரவைத்து
வெறுத்து
விட்டது.............
குப்பைதொட்டி
இன்பம்
என்னை
ஏற்றுகொண்டது
இங்கு(திருநெல்வேலி சரணாலயம் )
ஒப்படைத்தது......
என்
இன்பம்
அன்பின்
அரவனைபின்
அறிவின்
அக்கறையின்
தலைமையகமான
இந்த
சரணாலயத்தில்
தவல்வதே..........!
by
kavipriyan
-----------------------------------------------------------
"இங்கு"
(திருநெல்வேலி சரணாலயம்)
இங்கு
நீ
துயில்கொள்ள
பட்டாம்பூச்சிகளும்
சிறகுகள்
நீட்டும்...............
இங்கு
நீ
தொடும்
தென்றலும்
சிலுசிலுக்கும்..............
இங்கு
நீ
புன்னகை
செய்தால்
பூக்களும்
தலையசைக்கும்.............
இங்கு
நீ
கூறும்
சிந்தனையை
கேட்க
சிலுவையில்
அறையப்பட்டவரும்
செவி
சாய்ப்பார்..............!
by
கவிப்ரியன்
--------------------------------------------------------------------
" தேன் கூடு "
நாங்கள்
விரும்பி
கட்டிய
தேன் கூடு
அல்ல
விதியால்
கட்டபட்ட
தேன் கூடு
by
கவிப்ரியன்
----------------------------------------------------------------
"இரு கால்கள் இல்லாதவனின் கடவுள்"
கருவறையிலேயே
களைந்து போகும்
பலர்
மத்தியில்................
கால்களிலந்தவது
காணடா
இவ்வுலகை.
என
எனை படைத்த
கடவுளை வணங்கவே
என் தாய்
காலடியில் விழுந்தேன்.............
by
kavipriyan
----------------------------------------------------------------
"குரங்கு"
நான்
மனிதர்களை
மிஞ்சினேன்..............
நான்
ஈன்ற
குட்டியை
என்னுடன்
சுமந்து................!
by
கவிப்ரியன்
-------------------------------------------------------------
"கங்காரு"
மனிதர்களை
போல
குப்பைதொட்டியிலிட்டு
மறைக்கவில்லை.............
என்
மடியிலிட்டே
மறைக்கிறேன்..............!
by
கவிப்ரியன்
-----------------------------------------------------------------
"பணம்"
உண்ண
உணவில்லாதொர்க்கு
உதவாமல்
இறந்து
கிடக்கிறது
வங்கியில்..........
சமுதாய
கொள்ளை
காரர்களால்..................!
by
கவிப்ரியன்
-----------------------------------------------------------------
"தங்கம்"
கூடினால்
கூடட்டும்
எவ்வளவு
என்றாலும்
வாங்குவோம்
பணம் படைத்தோர்..............
கூடுவதை
எண்ணித்தான்
குடிக்கும்
கூழையும்
குறைக்கிறோம்
ஏழை..........................!
by
கவிப்ரியன்
----------------------------------------------------------------------
"புல்லாங்குழல்"
நான் யாரால் சிரித்தாலும்
அழுதாலும் இன்னிசைதான்...
ஏனெனில்
துன்பங்கள் துளையிட்ட
நாணல் அல்லவா நான்...........!
by
கவிப்ரியன்
----------------------------------------------------------------
"மழலையின் சிரிப்பு"
பொன்னகையில் கூட கலப்படம்
உள்ளது....................
உன் புன்னகையில் ஏது
கலப்படம்.................!
by
கவிப்ரியன்
-------------------------------------------------------------------
"பெருமை"
அன்னை
பெருமைகொள்ள
வேலைக்கு
வெளிநாடு
செல்லும் போது
சொல்வான் மனைவியிடம்...
வேலைக்கு நான் என்றும்
வீட்டிற்கு நீ என்றும்
வேலை முடிந்து
திரும்பி வந்து
பார்ப்பான்
அவள் அன்னை வீட்டில்
அவன் அன்னை தெருவில்...
என்ன பெருமை!..........
by
கவிப்ரியன்
--------------------------------------------------------------
"ஏழை"
பணக்காரனே
தோல்வி
கண்டு
துவண்டுபோவான்
ஏழை அல்ல......!
by
கவிப்ரியன்
---------------------------------------------------------
"அன்னைதெரசா"
நாங்கள்
அன்பிற்கு
அடிமையானோர்
நீங்கள்
அன்பிற்கு
அன்னையல்லோ......!
by
கவிப்ரியன்
-----------------------------------------------------------------
"சோம்பேறி"
துணிச்சல்காரன்
முடியாததையும்
முயற்ச்சிசெய்வான்
சோம்பேறியே
கிடைத்ததையும்
நழுவவிடுவான்.....!
by
கவிப்ரியன்
-----------------------------------------------------------------
"அன்பு"
அலை
அலையாய்
அக்கறை
காட்டும்
ஒவ்வொரு
உயிரிடமும்
இருப்பது...!
by
கவிப்ரியன்
-------------------------------------------------------------
"குடிசையின் இன்பம்"
மாளிகையில்
வாழ்பவரெல்லாம்
இரவில்
மட்டும் தான்
நட்சத்திரங்களை
காண்பார்...
நாங்கள்
மட்டும் தான்
பகலிலும்
காண்போம்...
வீட்டிற்குள்
இருந்தபடியே......!
by
கவிப்ரியன்
--------------------------------------------------------]
"சகோதரன்"
உணர்விற்கு
ஊக்கமளித்து
உழைப்பிற்கு
கைகொடுத்து
வெற்றியில்
விளகிநிர்பவன்......!
by
கவிப்ரியன்
---------------------------------------------------------
"காதல்"
என்னோடு
ஏன்
என்று
கேட்காமல்
வந்தவளுக்கு...................
எப்போது
எப்படி
என்று
தெரியாமல்
நிலவை
வாங்க ஆசை.............!
by
கவிப்ரியன்
--------------------------------------------------------------------
"பாதங்கள்"
தூக்கிச் செல்லும்வரை
தொடுகிறேன்
ஒவ்வொருநாளும்
நீ
என்னை
நினைபதற்கு
அல்ல
என் ஒவ்வொரு
நினைவுகளையும்
உன்னிடம்
பதிப்பைதிற்கு.....!
by
கவிப்ரியன்
-----------------------------------------------------------------
இவை திருநெல்வேலி சரணாலய குழந்தைகளுக்கு நான் அளிக்கும் சில பரிசு..
பல பரிசுகளுடன் காத்திருக்கும்
கவிப்ரியன்
"நன்றி"
--------------------------------------------------------------------