ஈழத்தில் எங்கள் முகங்கள்
யாழ்ப்பாண மண்களில்
நாங்கள் தீயில் சுடப்பட்ட பொம்மைகள்
எங்கள் குழந்தைகள் விளையாட
மலையக மண்களில்
நாங்கள் வேரற்ற மரங்கள்
எங்கள் வளர்ப்பு பறவைகளுக்கு
மட்டகளப்பை மண்களில்
நாங்கள் கிளிஞ்சல்கள்
புது முத்தை பிறக்கவைக்க
வன்னி மண்களில்
நாங்கள் விதைகள்
பயிர் அற்ற நிலங்களுக்கு
கிளிநொச்சி மண்களில்
நாங்கள் நீர்
எங்கள் குருதியில் விளைநிலங்களுக்கு
பாலி ஆறுகளில்
எங்கள் குருதிகளில்
எங்கள் யுவாதிகள் உயிரை காப்போம்
விழ்வேன் என்று நினைத்தாயோ !!
இடிந்த கட்டிடங்கள்
எறிந்த குடிசைகள்
விழுந்த மரங்கள்
உடைந்த பாறைகள்
சிதைந்த உடல்கள்
ஆங்காங்கே விழித்தே இருக்கிறது
மரண ஓசைகேட்டு
ஒடிந்த புற்கள் குட பணியாது உன்னிடம்
விழ்வேன் என்று நினைத்தாயோ !!
எங்கள்
ஈழத்து தேவதைகள்
அழுகுரல்
தேசம் எங்கும் எதிரொலிக்கும்
விடுதலை என்று !
விழ்வேன் என்று நினைத்தாயோ !!
ஓன்று, இரண்டு
என்று
உங்கள் தலைகளை எண்ணி
பாடம் படிப்போம் !
விழ்வேன் என்று நினைத்தாயோ !!
சிங்கள கூலிகளே !