மாணவன் ! ! !
மாணவனே நிமிர்ந்து நில் !
எதையும் துணிந்து சொல் !
மாணவனே துணிந்து செய் !
முடியும் என்று சொல் ! உனது செயல்
முழுமை அடையும் வரை !
முடியாது என்று சொல் ! அதர்மம்
உன் துணை நாடும் வேளை!
முனேற்ற பாதைகள் உன் முன்னே
படர்ந்து கிடக்கிறது
அதில் நீயாதான் உருண்டோடி
முன்னறே வேண்டும் !
மாணவனே நிமிர்ந்து நில்
எதையும் துணிந்து செய் !
முடிவு உன் உழைப்பை பொருத்தது !
சாதி மதம் எதுவும் எங்களில் இல்லை
அந்த சாக்கடை எங்கள் உதிரத்தில்
ஓடவும் இல்லை !
சமத்துவம் என்பதே எங்கள் சமயம் -அது
வாழும் தேசமோ எங்கள் இமயம் !
மாணவனே நிமிர்ந்து நில்- துணிந்து சொல்
எம்மதமும் என்மதம் என்று !
மாணவனே இன்னும் ஓர் சுதந்திரம் வேண்டும்
அதற்க்கு நீ வேண்டும்
அன்னியரிடமிருந்து அல்ல அந்த சுதந்திரம்
நம் நாட்டு ஆதிக்க காரர்களிடமிருந்து !
பேராசை காரர்களிடமிருந்து !
மாணவனே நிமிர்ந்து நில் துணிந்து போராடு
காண்பாய் உண்மையான சுதந்திரம் !
அற வழியில் போராட்டம் அதுவே
மக்களின் உரிமை வேர்களுக்கு
நிலையான நீரோட்டம் !
மாணவனே நிமிர்ந்து நில்
துணிந்து செய் அறப்போராட்டம்
அதன் வழியில் மலரட்டும்
மக்களின் உரிமை தோட்டம் !
தரணியில் எங்கும் காணோம்
தரிசு நிலம்
காணும் இடமெல்லாம் விளைந்து
நிற்கும் நன்செய் நிலம்
என்ற நிலை உருவாக வேண்டும் !
அதற்கு விவசாயமும் விஞ்ஞானமும்
ஒன்று சேர வேண்டும்
அதன் வழியாக நாட்டின்
பொருளாதாரம் உயர வேண்டும் !!
மாணவனே நிமிர்ந்து நில் துணிந்து செய்
விவசாயமும் விஞ்ஞானமும் !
அவை இரண்டுமே நம் நாட்டு வளர்ச்சியின் மூலதனம் !
வற்றாத சாதி சண்டை !
வறுமை தின்னும் வயிறுகள் !
ஆளை சாய்க்கும் வீய்ச்சருவாள் !
இன்னமும் இங்கே உண்டு !
இதற்க்கெல்லாம் காரணம்
தனி மனிதனின் பேராசைதான்!
மாணவனே நிமிர்ந்து நில்
துணிந்து சொல்
பேராசை என்னுள் இருக்காது
என் ஆசை பிறர் நலனை
பறிக்காது என்று !
மாணவனே தோல்விக்கு அஞ்சாதே
தோற்க துணிந்தால்தான்
வெற்றி காணமுடியும் !
முதலில் தோல்விக்கான தகுதியை
நீ அடைவாய்- பின்னர்
வெற்றிக்கான தகுதி- தானாய்
வந்து உன்னை அடையும் !
மாணவனே நிமிர்ந்து நில்
எதையும் துணிந்து செய் !
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கே சொந்தம்
கோழைகலுக்கு இல்லை !
நிகழ்கால பயணம் கட்டை வண்டியில் இருந்தாலும்
எதிகால பயணம் காற்று வண்டியில்
இருக்க வேண்டும் !
இன்று கைபிரசவதில் பிறக்கும்
எதிர்கால ஜனனம்
நாளை நவீன மருத்துவத்தில்
மலர வேண்டும் !
கல்வி வாடையே கலக்காத
உங்கள் கிராமத்தில்
இனி வரும் காலங்களில்
கல்வி மட்டுமே தென்றலாக வீச வேண்டும் !
மாணவனே நிமிர்ந்து நில்
நல்லதை துணிந்து செய் !
நாளைய பாரதத்தின் சிறப்பு
இன்று நீ பழிலும்
சிறப்பான கல்வியில் இருக்கு!