எழுத்து தளம்

எழுத்து தளம்
அது என் எழுதுகளம்

என் எண்ணங்களை ஏற்றிவைக்கும்
ஒரு வண்ணக்கூடாரம்
என் வாழ்வினில் கிடைத்த
தமிழின் தாயகம்.

சொல்லும் மொழியெல்லாம்
தமிழுக்கு இணையில்லை
நான் சொல்லி புரியவைக்க
தமிழ் ஒன்றும் புதுமொழி அல்ல.
ஆயினும்,
தமிழ் என்றும் புதுமையான மொழி.

தமிழை வர்ணிக்க நான் தேவையில்லை
தமிழை வாசிப்பதும்,கேட்பதுமே
முக்கனியை தேனில் மூழ்கடித்து
உண்ணுவதற்கு சமம்.

உயர்வினும் உயர்வாம் தமிழ்மொழியை
என் கற்பனையுண்மை கலந்த படைப்பிற்கு
நான் என்றும் பயன்படுத்துகிறேன்.

தமிழர்களின் படைப்புகளை
தமிழ் ரசிகர்களுக்கு படைக்க
எழுத்து தளம் என்றும் இமயமாய் இருக்கிறது.

என்றும் வாழ்க எழுத்து தளம்
நீ இல்லையென்றால் என் போன்றோரின்
எழுத்துக்கு ஏது வளம்?


எழுதியவர் : வென்றான் (28-Nov-11, 11:05 am)
Tanglish : eluthu thalam
பார்வை : 329

மேலே