இயற்கை

நீல வானில் ஒய்யாரமாய்
பவனி வரும் நிலவும்
கூட வரும் ஓராயிரம் நட்சத்ரமும்

பல லட்சம் பச்சை மரங்களும்
அதில் உறவாடும்
பல கோடி பறவைகளும்

நீரில் நீந்தும் மீன்களும்
கரையில் விளையாடும் நண்டுகளும்
அலை புரளும் கடலும்

மண் குடையும் புழுக்களும்
மதி குடையும் மனிதர்களும்
கல்லும் கனியும் கற்கண்டும்

கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும்
தொடுவதும் தொடர்வதும்

நானும் நீயும்
கூட இயற்கை தான்
எழுதுவதும் எழுதப் படுவதும்...

எழுதியவர் : shruthi (12-Dec-11, 9:29 pm)
பார்வை : 570

மேலே