"தாயுமானவள்! தாயும் ஆனவள்=தோழிக்காக"

ஏதோ உனக்காக ஒரு நட்பு கவி வாசிக்கவில்லை,
அறிமுகம் இல்லாமலே ஆயுள் முழுதும்
நம்மை சுற்றி வரும் நிழல் போன்ற
நம் நட்பையே கவியாக வாசிக்கிறேன் இதோ....
கையிரண்டை கோர்க்காமலே,
கெண்டைக்கால பார்க்காமலே,
தொண்டைகுழி அழகினுள்ளே
தொப்பென்று விழுந்தேன் புள்ள,
உன்னழகை பற்றி சொல்லவும்
உன் கையை பற்றி கொள்ளவும்
உன் உடனிருக்கும் உன்னுடன் பிறந்த
உறவாக இல்லாமல் போனது என் தப்புமில்ல...
அப்படி இல்லாத நிலை இல்லாமல்
போனது நம் நட்பினிலே.........
மண்ணை திண்ண மரணிக்கும்
நேரத்திலும் மனமுவந்து,
மனமும் வந்து, மனம் சொல்லும்
மாய சொல் நம் " நட்பு"
வெறும் துயரங்களை தந்து
பழித்து சென்றது என் "காதல்"
வெற்றி உயரங்களை நோக்கி
அழைத்து சென்றதது உன் "நட்பு"
நம்முள் தோன்றிய நட்பை காதல்
என்று சொல்லி களங்கப்படுத்தும்
கயவனல்ல நான்....
என்னிடம் பரிசளித்த உன் நட்பை
என்னை விட மேலாக நேசிக்கிறேன்
அப்படி நேசிக்கும் நம் நட்பை
வெறித்தனமாக காதலிக்கிறேன்.....
உலகில் நட்பு பெரிதா? காதல் பெரிதா?
என்ற உன் கேள்விக்கு என்னுடைய பதில்.....
என் உலகமே நம் நட்பான பின்பு
காதல் எப்படி உலகில் பெரிதாகும் தோழி.......
"தாய்க்கு பின்னே தாரம்"
இது வாழ்வியலில் இழைக்கப்பட்ட விதி...
தாய்க்கு பின்னும், தாரத்திற்கு முன்னும்
இருக்கும் ஒவ்வொரு நாழியும் 'தோழி' தான்
என்று என்னுள் மாற்றியதே
உன் நட்பு தான்
'''''''''''''''''''''''''''''''''''''''வளர்மதி''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''