காலம் கடந்து வாழும் நம் நட்பிற்கு ஜே!!!...
மதியே!!!...
என் நட்பின் வளர்பிறையே...
ஆம் என் செல்லத் தோழி அவள்!!!...
பெண்கள் கல்லூரி ...
நான்கு வருட பட்டயப் படிப்பு...
அங்கு தான் கண்டேன் அவளை...
பள்ளிப் படிப்பை முடித்து...
பருவச் சிட்டாய் மாறி...
சிறகடித்துப் பறக்க
சேர்ந்த வேடந்தாங்கல் அது!!!...
முப்பதுபேர் கொண்ட வகுப்பறை
எப்பொழுதாவது நடக்கும்
பாட வேளை சந்திப்பு
இது தான் எங்கள் சூழல்...
பெரிதாய் நட்பு பாராட்டல் இல்லை
நண்பர்கள் என்ற தம்பட்டம் இல்லை
இணைபிரியா தோழிகள் என மார்தட்டவில்லை
ஆனாலும் நட்புப் பரிமாற்றம் இல்லாமல் இல்லை!!!...
நாம் தொலைவில் நின்ற பொழுதும்
நம் நட்பின் இதயங்கள்
அருகருகே அமர்ந்து பேசக்
கண்டோம் தோழி!!!...
நம்மையே ...
நம் நட்பையே மற்றவர்களுக்காக
விடுக்கொடுத்த காலம் அது!!!...
மூன்றாண்டு காலங்கள் முடிந்து
நான்காம் ஆண்டு
நம்மை வரவேற்கக் காத்திருந்தது
விடுதி வாசல்...
அங்கே
நட்பின் மழையில்...
ஒரு குடையில்
இருவருமாய் உலாவர
நினைத்தோம்...
ஆனால்
தனித்தனியாய்
நட்பின் சாரலில்
நனையக் கண்டோம் தோழி!!!...
விடுதியின் இதயத்தில்
ஒன்றாக தங்க நினைத்தோம்
ஆனால் நம்மை
ஆட்ரிகள் வென்ரிகளாய்
வெவ்வேறு அறையாய்
பிரிக்கக் கண்டோம் தோழி!!!...
நம் அறையின் கதவுகள் மூடிருக்க
நம் மனதின் கதவுகள்
திறந்தே இருந்தன
நம் நட்பின் காலடித் தடம் பதிக்க!!!...
உன் காலடிச் சத்தம் கேட்டு
என் அறைக்கதவுகள் திறந்த வேளை
உன்னை கண்டும் காணாதது போல் நானிருக்க...
என்னைக் காண வந்த நீயோ
பார்த்தும் பார்க்காதது போல்
அழகாய் நடிப்பாய்...
என் பெயர் சொல்லி
அழைக்கத் துடிப்பாய்
ஆனால் அழைக்காமல் தவிப்பாய்...
நம் தோழிகளே
நம்மை பிரித்து வைத்து
இரசித்த காலம் அது...
கல்லூரி வாழ்க்கை முற்று பெற
தொடர்ந்த நம் வாழ்க்கைப் பயணத்தில்
நீயும் நானும் வெகுத்தொலைவில்...
எப்பொழுதாவது நடக்கும்
தொலைபேசி உரையாடல்...
அத்தி பூத்தாற்போல் நடக்கும்
விழாக்களில் சந்திப்பு...
இப்படி நம் வாழ்க்கை தொடர...
வருடங்கள்...
பல கடந்து வந்த
புது வருடப் பிறப்பு!!!...
தொடர்ந்து வந்த
வாழ்த்துக்களின் மணியோசை...
என் கைபேசி
செல்லமாய் சிணுங்கியது...
உன்பெயர் கண்டு...
சிறு குழந்தையாய் குதூகலித்து
கைபேசியை
என் கைகள் தாங்க...
மறுமுனையில்
தழுதழுத்த குரலில்
அடக்க முடியாத
அழுகையில் நீ???...
உன் கண்ணீர்த் துளிகள்
நம் நட்பின் பாதம் நனைக்க...
திகைத்து நின்ற வேளையிலே
நச்சென்று கூறினாயே
என்றும் கூறிடாத
இரண்டு வரிகளுடன் கூடிய
புத்தாண்டு வாழ்த்தை...
டியர் ஐ மிஸ் யு!!! ...
டியர் ஐ லவ் யு!!! ...
விஷ் யு ஹாப்பி நியூ இயர்!!! ... என்று...
என் சந்தோஷத்தை சொல்ல
வார்த்தைகள் இன்றி...
மெய்மறந்து நின்றேன் தோழி!!!...
உன் கண்ணீர்த் துளிகள்
இழந்து விட்ட
நம் நட்பின் காலங்களை நினைத்தா??!!!
இல்லை ...
காலம் கடந்து நிற்கும்
நம் அன்பைச் சொல்லவா!!!?...
நட்பின் தோட்டத்தில்
ஆயிரம் மலர்கள் பூத்திருக்க
என்றும் வாடாத மலராய்
நீ!!!... மட்டும்
இருக்கக் கண்டேன் தோழி!!!...
நம்மை பிரித்து வைத்த தோழிகள்
நம்மை மறந்து பிரிந்திருக்க...
பிரிந்திருந்த நாமோ!!!...
பிரிந்தும் பிரியாமல் இருக்கக்
கண்டேன் தோழி!!!...
காலம் கடந்து வாழும் நம் நட்பிற்கு ஜே!!!...
-ப்ரியமுடன்
நிலா தோழி...