தோழா!! தோழா!!

வீழாய் தோழா!
வீறு கொண்டு எழு!
வெற்றிப் பயிர் நட
வேர்வை கொண்டு உழு!
உலவும் உடம்பினில்
ஓடும் குருதியாய் ,
தடைகளை வெட்டிச்
சிகரம் தொடு!!
இளந்தளிர் மேல்விழும்
பனித்துளி போல!
தோல்விகள் தாங்கு
தொடராய் மெல்ல!
இருக்கிற உலகம்
இளைஞன் வெல்ல!
சரித்திரம் படைப்போம்
நம் பெயர் சொல்ல!!

எழுதியவர் : தோழன் மணிகண்டன் (25-Dec-11, 12:58 pm)
சேர்த்தது : தோழன் மணிகண்டன்
பார்வை : 286

மேலே