ஏன் நகம் வெட்டலை ??

ஏன் நகம் வெட்டலை .??..கேட்டாயே ஒரு கேள்வி...
நான் கூறும் பதில் என் காதலை சொல்லுமா,
கதையை சொல்லுமா நீயே முடிவு செய்துகொள்....


என்னவன் என்றோ கூறிய நினைவு..

உன் நகங்கள் தான் எனக்கு நிலா!
உன்னொடு இருக்கையில்
அவைகள் வளர்பிறை..
உன்னொடு நான் இருக்கையில்
அவைகள் தேய்பிறை....

பிரிவில் சந்தித்த போது கூறிய நினைவு...

வெட்ட வெட்ட வளர்கிறது ..
உன் நினைவுகளைப் போலவே
என் நகமும்.


உண்மையா சொல்லனும்னா ....

வளர்ப்பது தற்காப்புக்கு மட்டுமல்ல..
அழகுக்கும் என்று பொய் சொல்ல
தெரியலையே...

இப்போ வெட்டனும்னு தோணலை..
தோணும்போது வெட்டிடுவேன்..
எல்லாமே இப்படிதானே..

கவனமாக வெட்டனுமே..
ஆழமாக வெட்டினால்
ஆஆன்னு கத்தனும்...
ஐயோன்னு துடிக்கனும்...

ரத்தக்கசிவு வரலாம், சொல்ல போனா
விண் விண் என்று வலி கொடுக்கும்..
அதனால வெட்டல.. அப்படின்னும் சொல்லிக்கலாம்..

இராத்திரி வெட்டினால்
தரித்திரம் என்று
சாவித்திரி பாட்டி சொன்னதாலே
நகம் வெட்டல....

"சோம்பேறித்தனம்"னு ஒத்த சொல்லுல
பதிலை வைச்சுகிட்டு....
மொள்ளமாறிதனமான மொக்கை கவிதை வேறன்னு...
உன் உள் மனசு கமெண்டு காதுல விழுது...


நாளைக்கு வெட்டிடுறேன்...போதுமா...

எழுதியவர் : கலிபா சாஹிப் (28-Dec-11, 11:43 am)
பார்வை : 346

மேலே