அழுக்கு போக்கும் அருமருந்து

நாள் தோறும்
சோப்பு போடுகிறோம்
உடல் அழுக்குப் போக!

உள்ளத்தின் அழுக்கைப் போக்க
என்ன செய்ய வேண்டும்?

ஒருமையுடன் இறைவன் திருமலரடி
நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்,

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்,

பொய்மை பேசாதிருக்க வேண்டும்.
வேறென்ன வேண்டும்?

தனி ஒருவர்க்கு சோப்பு போட
வேண்டியதில்லை;

கல்வி அறிவு பெற்று,
நல்லவனாகவும், பிறர்க்கு உதவும்
மனப்பாங்கும் வேண்டும்,

அதுவே உள்ளத்தின்
அழுக்கு போக்கும் அருமருந்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-11, 8:18 am)
பார்வை : 391

மேலே