மிச்சம்

காற்றைக் கேள் தனிமையில்
எப்படியெல்லாம் உன்னுடன் பேசினேன்
என்பதைச் சொல்லும்

கடலைகேள் உனக்காக நான் வடித்த
கண்ணீரை சொல்லும்

அலையைக்கேள் உன்னை அடைய
நான் எடுத்த முயர்ச்சிகளைச் சொல்லும்

மலையைக் கேள் நீ என் உள்ளத்தில்
எப்படி உயர்ந்து நிகிறாய்
என்பதைச் சொல்லும்

சிலையைக்கேள் உனக்காக என்னையே
நான் செதுக்கிய கதையைச் சொல்லும்

நிலவைக்கேள் உனக்காக நான்
தேய்ந்த கதையை சொல்லும்

மேகத்தைக்கேள் உன்னை சுமந்த
என் இதயம் எத்தனை மென்மையானது
என்று சொல்லும்

நட்சத்திரங்களைக்கேள் நான் உன்மீது
கொண்ட காதலின் அளவைச் சொல்லும்

நீ தினமும் செல்லும்
பேருந்தைக்கேள் நான் உனக்காக ஓடிய
ஓட்டத்தைச் சொல்லும்

பெண்ணேஉனக்காக ஓடிய ஓட்டத்தை
ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால்
என் நாட்டுக்காவது தங்கம் கிடைத்திருக்கும்

ஆனால் இன்று என் தாய் எனக்கு
அணிவித்த தங்கச் சங்கிலி
விற்கப்பட்டதுதான் மிச்சம்.

எழுதியவர் : yasmeen (28-Dec-11, 12:03 pm)
Tanglish : micham
பார்வை : 284

மேலே