தள்ளு வண்டி தாத்தா

அதிகாலை துயிலெழுந்து...

ஆறு மைல் தொலைவு நடந்து

சந்தையிலே வண்டி நிரப்பி...

பகலவன் கூடவே பாசக்கூவலாய்...

என் தெரு கடக்கின்ற தள்ளுவண்டி தாத்தாவிடம்

சண்டையிடும் தாய்க்குலங்கள்...

காய் விலை சொன்னதாலே ...

விஞ்ஞான வளர்வுதனில்

முச்சந்தி உதயமாய் தோன்றிவிட்ட காய் கடையினும்

உன் வண்டி காயிக்கு கொம்பா என....

விலைவாசி காலபோக்கில் விண்ணை முட்டும்

வேடிக்கையில்....

தள்ளுவண்டி தாத்தாவின் கால்வலியின் விலையென்ன?

உணராத தாய்க்குலங்கள்..

எழுதியவர் : காளிதாசன்.. (28-Dec-11, 4:01 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 322

மேலே