பொங்கலோ!!! பொங்கல்!!!

பொங்கலோ பொங்கல் பொழியோ பொழி
சின்ன பொன்னே சேர்ந்து சொல்லமா
பொங்கலோ பொங்கல் பொழியோ பொழி

பழையவை கருகட்டும் புதியவை பெருகட்டும்
மஞ்சள் எடுத்து வச்சிருக்கேன் - மாரியம்மா
மணகாடு கரும்பு வச்சிருக்கேன் - காளியம்மா
பச்ச நெல்ல பொடச்சி பொட்ட கோழி அடிச்சி
படையல் வச்சிருக்கேன் இத்தனை நாளும் காத்தவளே -இந்திர தேவி
இன்னைகித்த நேரம் வந்தது - ஏத்துக்கடி
போகி பெருகட்டும் மாறி பொழியட்டும் ஏத்துக்கம்மா .

விதை நெல்லு பயிராகி வெலஞ்சத எடுத்து குத்தி
வாசல் தரைய வெட்டி வயகாடு சருவ கொளுத்தி
பச்ச அரிசி புது வெள்ளம் கலந்து
பல பலனு விடியும் முன்னே பக்குவமா பொங்க வச்சி
படையல் வச்சிருக்கேன் பகலவனே எழுந்து வாயா
முதல் கரும்பு முழுசா உனக்கு
தை மாதம் முதல் தேதி முதல் விருந்து - உனக்காக
ஆயரம் கரத்தனே அகிலமெல்லாம் செழிக்கட்டும்
அன்போடு ஏற்று கொள்ளும் - முதல் பொங்கல்

பொங்கலோ!!! பொங்கல் !!!

வெரும்நிலத்த ஆழ தோண்டி சேற்றை கூழாக்கி
ஏர ஏத்தமா இழுத்து பரம்ப பளுவ இழுத்து
பச்ச நெல்ல விளைய பலமா இருந்த - மாயவனே (மாடு , எருது மற்றும் பல )
நல்ளிரிட்டும் தூங்காம காவலுக்கு வந்தவனே - வைரவா (காவல் நாய் )
பச்ச நாத்து பச்சரிசி சாதமாச்சி பங்கு வைக்க வேண்டுமய்ய
அடி கட்ட (வைக்கோல் ) பூமா தேவிக்கி
நடு கட்ட (வைக்கோல் ) நாளும் உழைத்த மாயவனுக்கு (எருது )
நுனி கட்ட (நெற்கதிர் ) நெற்மணியாச்சி பச்சரிசி சோராச்சி
இரட்டை கொம்புக்கார கழுத்து மணிகார (எருது )
வண்ண மேனி அழகா வைராற உன்னுமைய ..

பொங்கலோ பொங்கல் பொழியோ பொழி
சின்ன பொன்னே சேர்ந்து சொல்லமா
பொங்கலோ பொங்கல் பொழியோ பொழி

ஏர் பறித்து ,ஏத்தம் இரச்சி,
நாற்று விட்டு ,நடவ் நட்டு
காலையும் மாலையும் நீர் பாய்ச்சி
நெடு வயல் நிறைய கண்கொண்டு
அறுவடை செய்து ,களம் அடித்து
நெற்மணிபதிர் பிரித்து வெளஞ்ச நெல்லு
உரலில் இட்டு பச்சரிசி பொடாச்சி எடுத்து
பச்சை பானைல பொங்கலாகி
ஆட்டு கறி சமச்சி வச்சேன் - அய்யா உழவரே என் மச்சா
வாருமையா உன்ன வேணுமையா

தாத்தா பாட்டி ,அம்மா அப்பா
பெரியப்பா பெரியம்மா ,சித்தப்பா சின்னம்மா
அத்தையம்மா ,மாமா ,பெரிய மாமா ,சின்ன மாமா
அண்ணா அண்ணி ,தம்பி தங்க நண்பரே அன்பரே ..
எல்லாரையும் காண வந்தேன் பொங்கலுக்கு - பால் பொங்கியாச்ச ?

பொங்கலோ பொங்கல் பொழியோ பொழி
சின்ன பொன்னே சேர்ந்து சொல்லமா
பொங்கலோ பொங்கல் பொழியோ பொழி

-Jagakutty

எழுதியவர் : Jagadeeshwaran (12-Jan-12, 8:30 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 315

மேலே