என் தோழிக்கு மட்டும்...
அன்றைய தினம்...
நிலவு இல்லாத இரவு போல்
கருமேகம் வானில் படர்ந்து இருந்தது...
மாலை பொழுது தான் என்று
உண்மையாக உணர முடியவில்லை....
எனக்கு மிகவும் பிடித்த தோழி
என் பக்கத்தில் அமர்ந்திருந்தால்...
வேறெங்கும் இல்லை!!!
பல்லவன் பேருந்து உள்ளே....
பேருந்தில் யாருமே இல்லே...
நாங்கள் இருவரும் மட்டும்தான்...
யாராவது பார்த்து தப்பாக பேசிவிடுவார்களோ
என்று அவள் விழி பேசியதை
என் விழியால் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்,,,
பேருந்து சிறிது நிரம்பியது...
பேருந்தும் உடனே கிளம்பியது...
பேருந்து புறப்பட்ட உடனே,
என்னிடம் பேச துவங்கினால்...
குழந்தை பேசும் அழகை அன்னை
பார்த்து ரசிப்பதை போல,
அவள் பேசும் அழகை நான்
மெய்மறந்து ரசித்து கொண்டிருந்தேன்...
சட்டென்று என்னை கிள்ளி,
மறுபடியும் என் கவனத்தை அவள் மீது ஈர்த்தல்...
சிரித்தபடியே என்னிடம்....
கவிதை எழுதுகிறாய் என்று கேள்வி பட்டேன்...
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றால்!!!!!
அவளை பற்றி கவிதை எழுத வார்த்தைகளை தேடினேன்...
தமிழ் மொழியிலே இருக்காதோ என்று சற்று பயந்தேன்...
என் மனம் ஏனோ அன்று சிந்திக்க மறுத்தது,
வானம், மேகம், மலர், நதி, நிலா,தென்றல் போன்ற வார்த்தைகளால் அவளை பற்றி கவிதை சொல்ல முடியாது என்று உணர்ந்தேன்...
சிறிது நேரம் அமைதியாக இருந்தேன்...
சரி விடு இன்னொரு நாள் சொல் என்றால்...
இதோ சொல்கிறேன் கேள் என்று என்
கண்களை மூடினேன்...
கலங்கிய கண்களை திறந்து...
என்னை பெறாத தாய் நீதானடி என்றேன்...
அதை தவிர எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை என்றேன்...
தோழர்கள் என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட
முடியாது எங்கள் உறவை,
என்மனம் ஏற்க மறுத்தது அவளின் பிரிவை...
அவள் இறங்கும் இடம் வந்ததும் என்னை தனியே விட்டுசென்றால்...
அது தற்காலிக விடுப்பு தான் என்று எண்ணிக்கொண்டு,
அடுத்த நிறுத்தத்தில் நானும் இறங்கினேன்,
என் கண்களை துடைத்து கொண்டு...
இதில் கூறிய சம்பவம் பாதிக்கு மேல் உண்மை...
இது என் தோழிக்காக ஒப்படைக்கிறேன்.....
இதே போன்ற கவிதையை நான் இதே தளத்தில் படித்துள்ளேன்...
என்னை இப்படி எழுத தூண்டியதும் அதுவே..
அதை படைத்தவர்க்கு நன்றி...