நட்பு! (நகைச்சுவைக் கவிதை)

பாசம்
ஒரு பகலில்
என்னைத் தனியே
விட்டுச் சென்றது!

ஏன் என்றதற்கு,
காதல்
உன்னைப் பார்த்துக்கொள்ளும்
என்று பதில் கூறிச் சென்றது!

காதல் ஓர் இரவு
என்னை பரிதவிக்க விட்டது!
ஏன் என்றதற்கு
காமம்
உடனிருக்கும் கவலைப்படாதே என்றது!

காமம்
விடிந்தவுடன் காணாமல் போனது!
எங்கே என்று எழுந்து தேடிச் சென்று
பின் எதுவும் காணாமல் திரும்பி வந்தால்,

ஏன்டா, எங்க போயிருந்த
நேத்து முழுக்க?
என்று சட்டையை
கொத்தாய் பிடித்தது
நட்பு!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (18-Jan-12, 5:00 am)
பார்வை : 557

மேலே