இச்சு இச்சு

படபடக்குது பட்டாம் பூச்சி
மனசுக்குள்ளே என்ன ஆச்சு
கட்டி அணைத்து இச்சுஇச்சு
கன்னம் ரெண்டும் போச்சுபோச்சு

கதிரவன் முன் எழும்பியாச்சு
சாமிபடத்தில் சந்தனக் குச்சு
சந்தோஷமனதில் ஏத்தி வைச்சு
சக்கரவாக கச்சேரி வைச்சு
கட்டி அணைத்து இச்சுஇச்சு

ஆசையெல்லாம் சேர்த்துவைச்சு
அன்னையர்தின நாளும் ஆச்சு
அன்புச் செல்வம் ஆர்வப்பேச்சு
அன்பளிப்புக் கவிதை வீச்சு
அம்மாவின் வாழ்வின் மூச்சு
கட்டிஅணைத்து இச்சுஇச்சு

பிஞ்சு எண்ண ஆசை நெஞ்சு
பிள்ளை பேசும் வெள்ளைப்பேச்சு
உள்ளம் எங்கும் உண்மை வீச்சு
என்றுசேரும் இந்தப் பொச்சு
அன்று தோன்றும் பேச்சில் பூச்சு
பொச்சு வாழ்வு இஞ்சி அளவும்
மிஞ்சிடாது இன்பங் காண
எஞ்சியுள்ள காலம்வரை
மச்சிபோல காப்போம் வாழ்வை. – என்றும்
விஞ்சி கிடைக்கும் இச்சுஇச்சு.


மச்சு – வீட்டின் கூரை
பொச்சு – குற்றம்.

எழுதியவர் : kowsy (23-Jan-12, 12:35 pm)
பார்வை : 309

மேலே