அப்துல் கலாம் அவர்களுக்கு
(ஜனவரி மாதம் 2012 திரு அப்துல் கலாம் அவர்கள் இலங்கைக்கு சென்று சொற்பொழிவு வழங்கியதற்காக என் கண்டன கவிதை இது)
---------------------------------------------------
தூரம் கணக்கிட்டு பார்த்தால்
இலங்கை என்னவோ நம் அண்டை நாடுதான்.
ஆனால்
அங்கு புதைந்து கிடப்பதோ
உயிரோடு கொல்லபட்ட தமிழன் மண்டை ஓடுதான்.
ஐயா!
எங்களை கனவுகள் காண சொன்னீர்கள்.
கண்மூடி கொஞ்சம் கனவு காண்பதற்குள்
மண்மூடி என் மறத்தமிழ் இனம் மாய்க்கபட்டுவிட்டதே!
முழு தமிழ் இனத்தின் தலை கொய்யபட்ட பிறகு
முழங்கையில் முள்காயமென முழங்குவதோ?
துரோணர் பட்டம் நிலைக்க நம் துரோகிகளுக்கு
இலங்கையில் சொற்பொழிவு வழங்குவதோ?
எம் சகோதரியை கற்பழித்தவனோடு
சம்மந்தம் பேசுவது சரிதானா?
மஞ்சலென எங்கள் முகங்களில்
நீங்கள் பூசியதெல்லாம் கரிதானா?
---கோபத்தோடு---
----தமிழ்தாசன்---