பிரிவு .......(எனது பார்வையில் )
விலகும் வரை தெரியாத
வினோத உணர்வு .......
பழகிய நாட்களை நினைவூட்டும்
ஞாபக அறிவு ...
சொல்லி விலகியவர்கள்
சொல்லாத வலி இந்த பிரிவு ......
சொல்லாமல் விலகியவர்களின்
கதறல் மொழி இந்த பிரிவு ......
மனதின் விலா எலும்பு முறிவு
ஈடு செய்ய முடியா இந்த பிரிவு ......
சிலரின் பிரிவு
அன்னையின் முடிவில் ......
சிலரின் பிரிவு
காதல் வலியில்........
சிலரின் பிரிவு
நட்பு முறிவில் .......
பிரிவு .....இங்கே
வகைபடுத்தப்படுகிறது .......
வலிகளுக்கு தகுந்தவாறும் .......
கண்ணீர் துளிகளுக்கு உகந்தவாறும் .......
உடன் இருந்தவர்களின் அருமையை
அறிய உதவும் பரிசு இந்த பிரிவு .......
நேசத்தை வலுப்படுத்த
காத்திருக்க சொல்லும் வாய்ப்பு இந்த பிரிவு ......
அன்பை புரிந்துகொள்ள துடிக்கும்
ஆழ்மனத்தவிப்பு இந்தப் பிரிவு ........
பிரிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் .......
உங்களின் நேசமிக்கவர்களிடம்
நீங்கள் வைத்துள்ள பாசத்தை
தெரிந்துகொள்ள ...........
பிரிவுகளை நிரந்திரமாக்கிவிடாதீர்கள் .....
உங்களின் அன்பு மிக்கவர்களை விட்டு
உங்களால் வாழ முடியாது என்பதை
அவர்கள் உணர்ந்து கொள்ள ........