ஹைக்கூ கவிதைகள்

அழுது அழுது
உயரம் குறைந்தது
மெழுகுவர்த்தி ....

முன்று சிறகுகள் இருந்தும்
ஒரே இடத்தில் சுற்றும்
மின் விசிறி ....

விட்டில் பூச்சிக்கு பயந்து
மின் குழல் விளக்குக்கு
தாலிக்கட்டினேன்
எண்ணெய் காகிதத்தால் .....

வேலை நேரத்திலும்
ஓய்வு எடுக்கிறது
ஆட்டோ மீட்டர்கள் ....

ஏழைகளின் கஷ்டங்களை
பங்கு போட்டு கொண்டார்கள்
வீட்டு வாடகை தரகர்கள்.....

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (4-Feb-12, 2:25 pm)
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 352

மேலே