காதலர் தின சிறப்பு கவிதை

காதல் வானில் எத்தனையோ காதல்
நான் சொல்ல போவதும் ஒரு வகை காதல்

அவள் மீது அவனுக்கு தீராத காதல்

நொடிக்கு நொடி அவள் அருகில் இருக்கு நினைத்து

முடியாமல் போக அந்த வருத்தம் போக்க

நொடிக்கு நொடி தன காதலை சொன்னான்

குறுஞ்செய்தியில் அவளுக்கு

அவளும் அவனை காதலித்தாலும்

பழக பழக பாலும் புளிக்குமாம்

எப்போதும் வரும் குறுஞ்செய்தி என்ற

சொல்லாத அலுப்பு அவளிடம்

அன்றும் அவனிடம் இருந்து வந்தது குறுஞ்செய்தி

ஒரு நள்ளிரவில் எப்போதும் போல்

அவள் காணமல் இருக்க

காதலன் தவறி போனதை அறிய முடியாமல்

மறுநாள் அவன் தாயிடம் இருந்து அவளுக்கு

அலைபேசியில் அழைப்பு

ஒரு விபத்தில் அவன் இறந்து விட்டதாக

சொல்லி முடித்து இணைப்பை துண்டிக்க

அப்போதும் தான் கண்டால் அவன்

கடைசியாய் அனுப்பிய குறுஞ்செய்தியை

அதில் அவன்

உன் வீடு முன்னாடி நடந்த விபத்தில்

அடிபட்டு கிடக்கிறேன் நான் பிழைக்க மாட்டேன்

கடைசியா ஒருமுறை உன்னை பார்க்கணும்

வா செல்லம் என்று

அதை படித்து முடித்தவுடன்

கண்ணீர் கண்களில்

உயிர் இல்லை அவள் உடலில்

எழுதியவர் : ருத்ரன் (13-Feb-12, 7:12 pm)
பார்வை : 252

மேலே