ராத்திரி

ராத்திரி
இது ஒரு அழகான பொழுது
என்பதை விட
இது ஒரு அழகான தமிழ் வார்த்தை எனலாம்

முதல் என்று இதன்
முன்னால் போடுங்கள்
ஆஹா எத்தனை " கிக் " இரு பாலருக்கும் ?

சிவ என்று இதன்
முன்னால் போடுங்கள்
ஆஹா எத்தனை பக்தி மயம்

நவ என்று இதன்
முன்னால் போடுங்கள்
ஆஹா எத்தனை கலை நயம்

நடு என்று இதன்
முன்னால் போடுங்கள்
ஐயோ எவ்வளவு பயங்கரம் ?

இதில் எந்த ராத்திரி உங்களுக்குப் பிடிச்சிருக்கு ?

எழுதியவர் : (15-Feb-12, 3:27 pm)
பார்வை : 287

மேலே