மௌனமாய் என் மரண தவம்,,,,,,,,,,,,

மேகங்கள் இருள் சூழ்ந்து
மழை பொழிவதை போல
நீ இன்றி என் வாழ்வும்
இருள் சூழ்ந்து பொழிகிறது
கண்ணீராய்,,,,

ஒவ்வொரு இரவிலும்
என் கண்ணீரை பகிர்ந்து கொண்ட
என் வீட்டு தலையணைக்கும்
மௌனமாய் என் இறுதி நன்றிகளை
சொல்கிறேன்,,,,

உன்னை பற்றி நான்
எழுத ஆரம்பித்த பொழுது
என் கையெழுத்துக்கள் கூட
அழகாய் மாற்றம் பெற்றது
உன் மனம் மட்டும் இன்னும்
மாற்றம் பெறவில்லையே
அது ஏனடி,,,,

உனக்கு நான்
எனக்கு நீ என்று
கதை பேசிய விழிகள் இப்போது எங்கே,,,,

தலை வாரி
முகம் பார்த்து நான்
ரசித்த கண்ணாடியும் ஏழனமாய்
தாக்குதே என்னை,,,,

ஒளியில்லா சூரியனும்
நீ இல்லா வாழ்க்கையும் மட்டுமே
இனி என் வாழ்வில்
இறுதி வரை வருமா,,,,,?

வேணாமடி ஒரேடியாய் இறக்கிறேன்
உன்னை நினைத்துக்கொண்டே
ஒவ்வொரு நொடியும் இறப்பதை விட
ஒரு நொடியில் இறக்கிறேன்,,,,

மீண்டும் ஒரு ஜென்மம் வேண்டி
அதில் உனக்கு பிடித்தவனாய் பிறக்க வேண்டி
கல்லறையிலே உனக்காக
மௌனமாய் என் மரண தவம்,,,,

இப்படிக்கு,,,,,,,,,,,,,,,,,,,உன்னவன்

எழுதியவர் : நந்தி (16-Feb-12, 10:43 am)
பார்வை : 794

மேலே