70- சிறகை விரி ! சிகரம் தோடு,,!

சிறகை விரிப்பாய்! சிகரம் தொடுவாய்!
சிந்தனை செய்வாய் மானுடனே!
உறவை வளர்ப்பாய் உலகை வெல்வாய்
உண்மை இவைதான் மானுடனே!

ஒருமரக் கூட்டில் உறவுகள் தொடங்கும்
உலகம் அழைக்கும் வரைதானே!
சிறுபற வைக்கும் சிறையது வாமே
சிறகெடுத்து ஓடும் வரைதானே!

ஒருமரம் தோப்பாய் ஒருவீடு ஊராய்
உலகை விடுத்து வாழாதே!
பெருமைகள் அழைக்கும் பிறப்புன தாகும்
பிரிவினைக் குள்ளே மாளாதே !

சிறுதொழு வொன்றில் பிறந்தவ ரெனினும்
சிந்தனை யாலே நின்றாரே!
நிற,இன பேதம் நீக்கிஎல் லோரும்
நிலைபெறச் சிலுவையில் வென்றாரே!

சிறகை விரிப்பாய்! சிகரம் தொடுவாய்!
சிந்தனை செய்வாய் மானுடனே!
-௦+

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-Feb-12, 8:53 pm)
பார்வை : 904

மேலே