ஒர் ஏழை தமிழன்

தஞ்சை
பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்

அவன்
எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு
வாய்ப்பிளந்த போது
எனக்குள்
ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...

வானுயர்ந்த கோபுரம் போல்
என்னாடே உயர்ந்தது என்று
தலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு கூட்டம்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...

சற்று முன்
தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...

ஒர்
ஏழை தமிழனாக ...!!!



செ.சத்யா செந்தில்,
தமிழ் முதலாம் ஆண்டு.
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், தமிழ் ம (21-Feb-12, 11:07 am)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 199

மேலே