அறியாமை(சொல்லாத கருத்தல்ல)

இரவில் தூங்கவேண்டிய நேரம்
இழந்தேன் தூக்கத்தை மின்தடையால்
இருட்டு வேறு இரவை ஆட்டி படைத்தது
இளம் சூரியன் விரட்டபோவது தெரியாமல்

எதிரில் தெரிந்த வெளிச்சம் என்னை
எளிதில் மிரள வைத்தது அது
எளிய வெண்மைநிறம் நகர்ந்து செல்கிறது
எதுவும் அறியாமல் பின்னால் நகர்கிறேன்
எதோ நட்சத்திர தோற்றம் எனக்குள்

இன்னும் சிறிது தூரம் செல்கிறேன்
இன்னொரு ஒரு அதிசயம் தரையில்
இதைய நடுக்கத்தோடு நகர்கிறேன் பின்னால்
இதுவும் ஒரு உலக அதிசயம் ஆகுமோ
இதமான வெளிச்சத்தில் நிலவு நகர்கிறது

இதில் நட்சத்திரத்தை , நிலவு துரத்துகிறது
இந்த அதிசயத்தை பார்த்துவிட வேண்டும்
இதைய துடிப்போடு அருகில் செல்கிறேன் !
துரத்தியது நிலவும் அல்ல,
ஓடியது நட்சத்திரமும் அல்ல

மின்மினி பூச்சியும்,
டார்ச் விளக்கின் வெளிச்சம் என்று !

மக்கள் மனதிலும்
அறியாமை இருட்டு
இருக்கும் போது
மூட நம்பிக்கை
முக்கிய பிரச்சினையாகிறது .

திருந்துங்கள் !


என்றும் அன்புடன் "நட்புக்காக"
இது ஒரு "அறியாமைக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (21-Feb-12, 11:34 am)
பார்வை : 250

மேலே