மரணத்தை அனுபவிக்க முடியுமா?
என் தோழர் அசோக் ப்ரியன், நான் எழுதிய "மரணம் என்பது யாது?" என்ற கவிதையில், சில கேள்விகளைப் பொருத்தி அன்போடு விடைகேட்டுள்ளதால், இனிவரும் சொற்றொடர்கள் உங்கள்முன்னால்.
அசோக் ப்ரியன் கேள்விக்கான பதில்களைக் கீழே காண்க (பிறப்பு, இறப்பை எவ்வாறு அனுபவம், அறிதல், ஞாபகம் இவற்றோடு ஒப்பிட வாய்ப்புள்ளதா என்பதை).
தனிப்பட்ட ஒருவனுடைய,
பிறப்பும், இறப்பும்
அவனுக்கு அனுபவத்தை தருவதில்லை.
அவைகள், ஒருசில நாழிகைகளின் நிகழ்வுகளே.
பிறப்புக்கும், இறப்புக்கும்
இடைப்பட்ட காலகட்டங்களில்
படித்து, ஆராய்ந்து, அறிந்து, செயல்பட்டு
அதன்மூலம் பெறப்படுபவையே அனுபவம்.
அதிலும், நல்அனுபவத்தை
இங்கேயே கொடுத்துவிட்டு விடைபெறுவது
மேலும், சாலச் சிறந்தது.
மேலும்,
அறிதல், ஞாபகம்கொள்ளல்
பிறக்கும்தருணத்திற்கு பொருந்துவதில்லை.
ஆனால்,
இறப்பிற்குமுன்,
அறிதல், புரிதல்,
அறிந்த ஞாபகங்களை புரட்டிப்பார்த்தால்
இவையாவும் இயல்பானவையே.
நான்,
முடிந்த நிகழ்வுகளையும்,
படித்தறிந்த வாழ்க்கைச் சுவடுகளையும்,
வகுத்தறிந்து
பகுத்தறிவுடன் யோசிக்கையில்
நான் படைத்தது -
"மரணம் என்பது யாது?"
தங்கள், விடுகைக்கும், கருத்துக்கும் என் நன்றிகள்.