கயிறு ஒரு மெகாத் தொடர்
![](https://eluthu.com/images/loading.gif)
கட்டழகன் கட்டழ்கியின்
கழுத்தில் கட்டுவது
தாலிக் கயிறு
பைய்யன் பலசரக்குக் கடையில்
பொட்டலம் கட்டுவது
சணல் கயிறு
தோல்வியுற்றவன் தொங்க நினைப்பது
தூக்குக் கயிறு
கயல்விழி கன்னியரும்
கேரளா நெடுகிலும்
திரிப்பது தாம்புக் கயிறு
கவிஞன் முடிவில்லாமல்
எழுத்தில் திரிப்பது
கற்பனைக் கயிறு
தூங்குகிறவன் தொடையில்
அரசியல்வாதிகள் திரிப்பது
ஆனந்த சமூகக் கயிறு
....கவிதை முடியவில்லை நீங்களும்
தொடர்ந்து எழுதலாம்
கயிறு ஒரு முடிவில்லாத
இடையில் அறுந்து போனாலும் போகும்
ஒரு மெகாத் தொடர்
புதுசு கண்ணா புதுசு Added on 29 /2 /2012
------------------------------------------------------
கடவுள் பின்னிரண்டு கை ஒன்றில்
பிடித்திருப்பது பாசக் கயிறு
ஆற்று மணலை அள்ளி வந்து
ஆனந்தமாய் திரிப்பது மணல் கயிறு
இருபுறமும் அங்கும் இங்குமாக நின்று
போட்டியில் இழுப்பது போட்டிக் கயிறு
இருட்டில் நெளிந்து வளைந்து கிடந்து
நம்மை பயமுறுத்துவது தேய்புரி பழங்கயிறு
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : கவிநண்பர் மின்னல் கவிதை மன்னர் ஹரிஹர நாராயணன் என் கவிதைக்கு
தெரிவித்த கருத்திற்கு சொன்ன பதிலில் எழுதிய
கவிதை